41 வயசுலையும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ..!

By Nanthini on மாசி 17, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சுஜிதா தனுஷ். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

   

இந்த சீரியல் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து உருவானதாகும். தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு ரீமேக் செய்யப்பட்ட முதல் சீரியல் இதுவாகும். இந்த சீரியல் மூலம் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

 

சின்னத்திரையில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சீரியல் அல்லது சினிமா என்ற ஒரு நிலை வந்த போது சுஜிதா சீரியலை தேர்வு செய்தார்.

இவர் பல சீரியல்களிலும் நடித்துள்ள நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். சுஜிதா விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகாவிற்கு குரல் கொடுத்துள்ளார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் கதை கேளு கதை கேளு என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார்.

41 வயதாகும் சுஜிதா இன்னும் அதே இளமையுடனும் பொலிவுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.