தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் அடுத்தடுத்து படங்களில் தன்னை இணைத்து சிறப்பான ஹிட்களை கொடுத்து வருகின்றார். முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர். பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தற்போது விடுதலை 2 படத்தில் நடித்து வருகின்றார்.
கடந்த பொங்கல் பண்டிகை என்று இவருடைய நடிப்பில் வெளியான மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சாமிநாதன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஜா என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார். இந்த படம் விஜய் சேதுபதி கேரியரில் பெஸ்டாக அமைந்துள்ளது. அவருடைய ஐம்பதாவது திரைப்படமான இந்த திரைப்படம் அவருக்கு மறக்க முடியாத வெற்றி படமாக அமைந்துள்ளது.
மேலும் இவர் விஜயுடன் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் விஜய் நினைத்திருந்தால் நான் நடிக்காமல் இருந்திருப்பேன். ரொம்ப நல்ல மனுஷன். அவரு ஒரு ஐடியாவுல வந்திருப்பாரு நாம சும்மா சின்ன புள்ள மாதிரி பண்ணுனா அவரு டிஸ்டர்ப் ஆகிடக்கூடாதுன்னு அவருகிட்ட கேட்டேன் அவரு நண்பா நீங்க என்னநாலும் பண்ணுங்கன்னு சொன்னாரு.
என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாரு. டப்பிங்கில் கொம்பு வச்ச அந்த சீனை பார்த்துட்டு கைதட்டி சிரிச்சிட்டாரு. நான் எமோஷனலா பண்ணிருக்கேன். ஆனா இந்த மனுஷன் கொம்பு வச்சி இப்படி பண்ணி வச்சிருக்காரேன்னு சொல்லி சிரிச்சாரு என்று பேசியுள்ளார்.