கருப்பாக இருந்தால் ஹீரோயினியாக நடித்த வாய்ப்பு கிடைக்காது என்ற பிம்மத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்தவர் தான் கேப்ரில்லா செல்லாஸ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்த ஃபேமஸானார். இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கியது விஜய் டிவியில் தான். அதில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பிறகே டிக் டாக்கில் பலவிதமான வீடியோ போட்டு ரசிகர்களை கவர்ந்தார். அதன் பலனாக இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஐரா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் கபாலி, ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தாலும் அவை அனைத்துமே சிறிய சிறிய ரோல்களாக இருந்ததால் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார்.
அவருக்கு சன் டிவியில் சாக்லேட் மற்றும் சுந்தரி போன்ற சீரியல்களில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் சுந்தரி சீரியல் தான் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல் சீசன் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் விரைவில் இரண்டாவது சீசன் முடிவுக்கு வரவுள்ளது. அதிலும் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படியான நிலையில் கேப்ரில்லா தன்னுடைய கணவர் சுருளியை விவாகரத்து செய்வதாக செய்தி வெளிவந்த நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அதே சமயம் அவர் தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், நன்றி “சென்னை” மீண்டும் அன்போடு பிறகு சந்திக்கிறேன்.. break for media journey.. என்று பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் மீடியாவை விட்டு விலகுவதாக செய்தி பரவி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க