சங்ககாலமாகவே பல சீரியல்களும் ஹீரோயின்களை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல், மூன்று முடிச்சு, சுந்தரி, சிங்க பெண்ணே போன்ற சீரியல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டிஆர்பியிலும் நல்ல இடத்தில் உள்ளது. சன் டிவி தொடர் பெண்களை முன்னிலைப்படுத்தி தொடர் எடுத்து வருவதை பலரும் புகழ்ந்து வருகிறார்கள். சீரியலை பொறுத்தவரை பெண்கள் தான் ஆண்களை காட்டிலும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார்களாம். ராதிகா, தேவயானி, ரம்யா கிருஷ்ணன் போன்ற சினிமா நடிகைகள் சீரியல் பக்கம் கவனம் செலுத்திய போது கூட ஹீரோக்களை விட இவர்களுக்கு தான் அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டது.
ஆனால் சமீப காலமாகவே ஒரு சில திரைப்படங்கள் நடித்து பட வாய்ப்பு கிடைக்காமல் சீரியல் பக்கம் ஒதுங்கும் நடிகைகள் கூட ஹீரோயினாக நடிக்க லட்சக்கணக்கில் சம்பளம் கேட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மூன்று முடிச்சு சீரியலின் ஹீரோ நியாஸ் கான் கொடுத்த பேட்டி ஒன்றில், சீரியல் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து வெளிப்படையாகவே பேசி இருந்தார்.
அதாவது சினிமாவில் நடித்து விட்டு சிலர் சீரியலுக்கு வரும் போது அல்லது ஹிட் சீரியல்களில் நடித்தவர்களாக இருக்கும் பொழுது சில தங்களுக்கு இருக்கும் வரவேற்பு கொடுத்து ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். அதைப்போல சீரியலை பொறுத்தவரை ஹீரோயின்களுக்கு தான் அதிக சம்பளம் கொடுப்பார்கள் ஹீரோக்களுக்கு சம்பளம் குறைவுதான்.
இதனையடுத்து ஒரு லட்சம் வாங்கும் ஹீரோயின் என்று கூறுவது நடிகை சுவாதி கொண்டாவை தான் என்று கூறி வருகிறார்கள். ஏற்கனவே கயல் சீரியல், சுந்தரரி சீரியல் ஆகியவற்றில் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் தான் அதிக சம்பளம் வாங்கினாலும் இந்த அளவுக்கு யாரும் அதிகம் வாங்கியதில்லை என்று கூறப்படுகிறது.