விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் அவர் எப்படி தொகுத்து வழங்குவார் என்ற கவலை பிக் பாஸ் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் அட்டகாசமாக தொகுத்து வழங்கி வருகின்றார். போட்டியாளர்கள் யார் என்ன செய்தாலும் சுற்றி வளைத்து பேசுவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இருப்பதால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்கு கடந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரி ஆக சிவக்குமார், மஞ்சரி, ரானவ், பிரியா மற்றும் வர்ஷினி வெங்கட், ரயான் ஆகிய ஆறு போட்டியாளர்கள் வந்த நிலையில் கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்ற சுனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெண்கள் அணி ஒருபுறமும் ஆண்கள் அணி ஒருபுறமும் பிரிக்கப்பட்டு தனித்தனியே தக்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய பங்களிப்பை போட்டு சிறப்பாக விளையாடினர். இதனைத் தொடர்ந்து நேற்றைய எபிசோடில் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் அனைவரிடமும் டாஸ்க் பற்றி சுவாரசியமாக பேசினார். இதனைத் தொடர்ந்து இன்று விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் சற்று கோபமாக நடந்து கொண்டுள்ளார்.

அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், ஸ்வாபாப்பிங், ராய நீங்க சொல்லுங்க என்று விஜய் சேதுபதி சொல்வதுடன் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ள நிலையில் எப்படி சொல்றது, எல்லா விஷயத்திலும் கொஞ்சம் இன்வால்டா தான் வச்சிருக்காங்க, அதான் சார் பெருசா நம்பிக்கை வச்சாங்கன்னு ராயன் பேச நீங்க பேசுறது போதும் என்பது போன்று உட்காருங்கள் என விஜய் சேதுபதி கூறுகிறார்.
)
சௌந்தர்யா நீங்க சொல்லுங்க, அவங்க எப்படி ரிசீவ் பண்ணாங்க என விஜய் சேதுபதி கேட்க சவுண்டுக்கு ஒரே வெட்கமா போச்சு. சக போட்டியாளர்கள் எல்லாம் பயங்கரமா சிரித்தார்கள். சார் ஒரே ஒரு வார்த்தை என்று சௌந்தர்யா ஆரம்பிப்பதற்குள் ராயன் என சொல்லி சவுண்டை உட்கார சொல்லிவிட்டார் விஜய் சேதுபதி. இனிமே வாரம் வாரம் வந்து சௌந்தர்யாவை கேட்கவா நான், அப்புறம் என்ன சார் என ராயனிடம் விஜய் சேதுபதி கடுப்பானார். மேலும் இன்னொரு முறை யார் இதை செஞ்சாலும் சரி அடுத்த வாரத்தில் இருந்து அவங்க கிட்ட எந்த கேள்வியும் நான் கேட்க மாட்டேன் என்று கடுப்பாக விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
