மணமகளுக்கு தாலி கட்டப் போன தாய்.. உதயநிதி தலைமை வகித்த திருமண விழாவில் நடந்த சிரிப்பலை..!

By Nanthini on கார்த்திகை 17, 2024

Spread the love

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பாக சென்னை ஆர் கே நகர் தங்கம் மாளிகையில் எளியோர் எழுச்சி நாள் என்ற பெயரில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் விழா நடைபெற்றது. தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகுத்த நிலையில் 48 ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் மணமக்கள் அனைவருக்கும் சீர்வரிசை பொருள்களை வழங்கி வாழ்த்தினார்.

பெண்கள்தான் தாலி கட்டிக்கணுமா? மாப்பிள்ளை அவருக்கே தாலி கட்டிட்டாரு..  உதயநிதி ஸ்டாலின் பேச்சு! | Thali Not Just for Women: Deputy CM Udhayanidhi  Stalin's Remark on Wedding ...

   

48 ஜோடிகளுக்கும் கட்டில் மற்றும் மெத்தை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருள்கள் அது மட்டுமல்லாமல் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கி மணவாழ்க்கை சிறப்பாக துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் சூரியகுமார் மற்றும் குணவதி ஜோடிக்கு துணை முதல்வர் உதயநிதி தாலி எடுத்துக் கொடுத்தார். அந்த தாலியை எடுத்து குணமதியின் அம்மாவிடம் கொடுத்தார்.

   

udhayanidhi stalin dmk tn government

 

அப்போது பதற்றத்தில் மணமகளின் தாய் தானே தாலி வாங்கி மணமகள் கழுத்தில் கட்ட போனார். இதனைப் பார்த்து மணமகனும் பதறிப்போன நிலையில் ஷாக்கான உதயநிதி என்னம்மா நீங்க கட்ட போறீங்க தாலிய மாப்பிள்ளை கிட்ட கொடுங்க என்று சிரித்தபடி கூறினார். உடனே இளமையை உணர்ந்த தாய் மனம் அவனிடம் தாலியை கொடுத்து கட்ட செய்தார். இந்த நிகழ்வால்  அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.