தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பாவா லட்சுமணன். வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான காமெடிகளில் நடித்து கலக்கி இருப்பார். கலகலப்பு திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து இவர் நடித்த காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றன. பெரும்பாலும் இவர் வடிவேலு காம்பினேஷனில் பல திரைப்படங்களில் நடித்திருப்பார்.

தமிழ் சினிமா உலகில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் பொருளாதாரம் நெருக்கடியிலும் உள்ள நிலையில் தனது நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவருக்கு நடிகர் ஜீவா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் பண உதவி கொடுத்து உதவினார்கள்.

இந்த நிலையில் நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஷூட்டிங் சென்றபோது விஜயகாந்த் என்னை பார்த்து விட்டார் அப்போது இங்கே எங்க வந்தீங்க அப்படினு கேட்டார் ரஜினி படத்துல நடிக்க வெந்தேனு சொன்னேன். அதற்கு அவரு கூட மட்டும்தான் நடிப்பியா? எங்க கூடலாம் நடிக்க மாட்டியானு கேட்டாரு. அதுக்கப்புறம் என்னை பொள்ளாச்சிக்கு வர சொன்னார்.

அங்கெ போனேன். சார் வணக்கம் என்று சொன்னதும் இவன் நம்ம பையன் சார் எதாவது வேலை இருந்தா குடுங்க சார். 4 நாள் வேலை குடுத்தா வீட்டு வாடகையை குடுத்துருவான்னு சொன்னாரு. வாய்ப்பு குடுய்யான்னு சொன்னாரு. அதுக்கப்புறம் ஒருநாள் விஜயகாந்திடம் அண்ணே வானத்தை போல படம் ஹிட் ஆச்சு. அதேபோல மரியாதை படத்துல நடிங்கனு சொன்னேன். அந்த படத்தில நடிச்சாரு விஜயகாந்த் என்று பேசியுள்ளார்..
