TRP-யில் இடத்தை பிடிக்க புதிய சீரியலை அறிமுகப்படுத்தும் சன் டிவி… பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

By Soundarya on கார்த்திகை 17, 2024

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்களில் பெரும்பாலான சீரியல்கள் குறைந்தபட்சம் ஆயிரம் எபிசோட்களை நெருங்கிய பிறகு தான் முடிவுக்கு வரும். அதுவும் சில சீரியல்கள் எந்த அளவிற்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவிற்கு இழுத்தடிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்கள் கழித்து தான் முடிவுக்கு வரும். ஆனால் தற்போது ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வருவதால் சன் டிவியில் திடீரென்று எடுத்த முடிவு என்னவென்றால் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபடுகின்றதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள்.

   

அதன்படி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய முக்கியமான சீரியல்கள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வரும் நிலையில் இனியா சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. சுமார் இரண்டு வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் போதிய ஆதரவு கிடைக்காததால் விரைவில் முடிக்க போகிறார்கள்.

   

Watch Sundari Neeyum Sundaran Naanum S1 Episode 315 on Disney+ Hotstar

 

ஆனால் அதற்கு முன்னதாகவே மிஸ்டர் மனைவி என்ற சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. இதுதான் முதலில் முடிப்பதற்கு சன் டிவி சேனல் முடிவெடுத்துள்ளது. இருந்தாலும் இதற்கு இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் கூடி வராத காரணத்தால் முதலில் இனியா சீரியலை முடித்துவிட்டு அதன் பிறகு இந்த சீரியலை முடிக்கலாம் என முடிவெடுத்த நிலையில் சுந்தரி சீரியல் முடிந்துள்ளது.

Raghavi - New serial promo | விரைவில்

இப்படி ஒவ்வொரு சீரியலாக முடிவுக்கு வரும் நிலையில் புதுப்புது  சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது சன் டிவியில் ராகவி என்ற சீரியல் ஒளிபரப்ப படுவதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் நடிகை தேஜஸ்வினி, நடிகர் ஜிஸ்னு, கண்மணி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.