குரங்கு பொம்மை திரைப்படம் மூலம் கவனம் இருத்தவர்தான் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகந்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தன்னுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும் கதை தான் மகாராஜா. கதை வழக்கமானதாக இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு நித்திலன் சுவாமிநாதன் திரைக்கதை எழுதியிருந்த விதமே படத்தை பிளாக் பஸ்டர் வெற்றியாக மாற்றியது
நான் லீனியர் முறை கதை சொல்ல எதிர்பார்க்காத திருப்பங்கள் உணர்ச்சிவசமான கதைகள் என மகாராஜா படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றது. இந்தி ரசிகர்களிடையே இந்த படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக இந்த திரைப்படத்தை இந்தி ரீமேக் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நடிகர் ஆமீர் கான் மகாராஜா படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாகவும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ரோலில் அவரே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திரை துறையை சேர்ந்த பலரும் மகாராஜா படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான திரைக்கதை, கிளைமாக்ஸ் ட்விஸ்ட், விறுவிறுப்பான கதைக்களம் என படம் வேற லெவலில் இருந்தது. உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.இந்த நிலையில் மகாராஜா திரைப்படம் தற்போது சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ப்ரீ புக்கிங், முதல் நாள் வசூல் சேர்த்து 10 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் இரண்டாம் நாள் ப்ரீ புக்கிங் மட்டுமே ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கண்டிப்பாக மாபெரும் வசூல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.