எனக்கு சினிமாவில் மூன்று அண்ணன்கள்… அவர்களை மட்டும்தான் அப்படி அழைப்பேன்.. இளையராஜா நெகிழ்ச்சி!

By vinoth on நவம்பர் 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

   

அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.

 

ஆனால் ஒரு கட்டத்தில் எல்லா விமர்சனங்களையும் சுக்கு நூறாக்கி நம்பர் 1 இடத்துக்கு வந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய பெயர் இருந்தாலே படம் வியாபாரம் ஆகும் எனும் நிலைக்கு அவர் வந்தார். அதனால் இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ அவரிடம் திருத்தம் சொல்லக் கூட அஞ்சி அவர் கொடுக்கும் பாடல்களை எடுத்து சென்றனர். ஒட்டுமொத்த திரையுலகமே அவர் மேல் பெரிய மரியாதை வைத்தது.

ஆனால் இளையராஜா திரையுலகில் மூன்று பேர் மேல் மிகப்பெரிய அளவு மரியாதை வைத்து அவர்களை அண்ணா என்று அழைத்து வந்துள்ளர். இதுபற்றி அவரே ஒரு நேர்காணலில் “சினிமாவில் நான் மூன்று பேரைதான் அண்ணா என்று அழைத்துள்ளேன். ஒருவர் என்னை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம் அண்ணன். இரண்டாமர் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் அண்ணன் அவர்கள். மூன்றாமவர் பாடல் ஆசிரியர் வாலி அவர்கள்.” எனக் கூறியுள்ளார்.