கதாபாத்திரத்துக்காக இந்த அளவுக்கு மெனக்கெட்டாரா கமல்.. அன்பே சிவம் ‘சோடாபுட்டி கண்ணாடி’க்குப் பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

By vinoth on நவம்பர் 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு தனி பல்கலைக்கழகமாக விளங்கியவர் கமல்ஹாசன், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, பாடல் மற்றும் நடனம் என தொடாத துறைகளே இல்லை என சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

   

தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார். அப்படிதான் கமர்ஷியல் படங்களாக இயக்கி வந்த சுந்தர் சி தன்ன்னுடைய அன்பே சிவம் படத்தை இயக்க வைத்தார். அந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் இன்றளவும் ஒரு நல்ல படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

   

 

இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு விபத்துக்குப் பின்னர் கண்பார்வை பாதிக்கப்பட்டு, ஒரு மாற்றுத்திறனாளியாகி விடுவார். அதனல் அவருக்குக் கதைப்படி தடிமனான சோடாப்புட்டி கண்ணாடி அணிவிக்கவேண்டும் என திரைக்கதை அமைத்துள்ளனர். அதனால் ஒர்ஜினலாகவே தடிமனான கண்ணாடி வேண்டும் என சொல்லிவிட்டாராம் கமல்.

ஆனால் அவ்வளவு தடிமனான கண்ணாடி அணிந்தால் அவரது பார்வையில் பிர்ச்சனைகள் ஏற்படும். அதனால் சரியாக நடிக்க முடியாது. ஆனாலும் அதே கண்ணாடிதான் வேண்டும் என்பதில் கமல் பிடிவாதமாக இருந்துள்ளார். அதனால் பிரச்சனையை சமாளிக்க கண்ணாடியின் பவருக்கு நேரெதிரான பவர் கொண்ட காண்டாக்ட் லென்ஸை அணிந்துகொண்டாராம். அதனால் கண்ணாடி அவரின் பார்வையை பாதிக்கவில்லை. இப்படிதான் அந்த படம் முழுவதும் அந்த கண்ணாடியை அணிந்துகொண்டு நடித்தாராம்.