knee

குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு சம்மந்தமான பிரச்சனைகள்… அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் என்னென்ன…?

By Meena on நவம்பர் 30, 2024

Spread the love

குளிர்காலம் வந்து விட்டாலே பலவித உடல் உபாதைகள் வரக்கூடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், ஜலதோஷம் பலவற்றால் அவதிப்படுவர். இதில் குளிர்காலத்தில் வரக்கூடிய மற்றொரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள். இந்த பிரச்சனைகள் ஏன் ஏற்படுகிறது இதை தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவதால் எந்த வயதினர் ஆனாலும் பாதிக்க கூடிய ஒரு விஷயம் மூட்டு வலி, மூட்டு வீக்கம் அசௌகரியம் ஆகும். ஏனென்றால் இந்த குளிர் நேரத்தில் தசைகள் மற்றும் தசைநார்கள் கடினமாகும். அதனால் மூட்டு இயக்கங்கள் குறையும். இதனால் தான் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. வளிமண்டல அழுத்தம் வெப்பம் குறைவாக இருத்தல் போன்றவை திசுக்களை விரிவுபடுத்தி மூட்டுகளில் அழுத்தம் கொடுக்கிறது. இதனால் வலிகள் ஏற்படுகிறது.

   

வயது மூத்த பெரியோர்கள் இந்த நேரத்தில் மூட்டு வலியை அதிகமாக சந்திப்பார்கள். ஏனென்றால் குளிர் காலத்தில் மக்கள் வீட்டிலேயே இருப்பதோடு உடல் இயக்கமும் குறைந்து விடும். சூரிய ஒளியும் நமக்கு குறைவாக கிடைப்பதால் எலும்பு ஆரோக்கியத்துக்கு முக்கியமாக தேவைப்படும் வைட்டமின் டி கிடைக்காமல் இருப்பதாலும் இந்த குறைபாடு ஏற்படும்.

 

மூட்டு சம்பந்தமான பிரச்சினை குளிர்காலத்தில் வரும் போது என்னென்ன ஏற்படும் ன்றால் மூட்டு வலி, மூட்டை சுற்றிலும் வீக்கம், சட்டென்று மூட்டைளைப்பதில் நீட்டுவதில் சிரமம் போன்றவைகள் இருக்கும். இந்த பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டியது சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். யோகா நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

தசைநார்களை சற்று தலைவடைய செய்ய சூடான பேடுகளை பயன்படுத்துதல் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது போன்றவை மூட்டு திரவத்தின் விறைப்புத் தன்மையை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் மூட்டு சீராக இயங்கும். மேலும் இந்த குளிர் நேரத்தில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தக்கூடிய ஒமேகா 3 கால்சியம் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதையும் தாண்டி உங்களுக்கு அதிகப்படியான பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.