பிக் பாஸ் எட்டாவது சீசன் நடந்து நேற்றோடு முடிவடைந்துவிட்டது. டைட்டில் வின்னராக முத்து குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் ஒரு சில வாரங்களிலேயே முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்பது தெரிந்து விட்டது. மற்ற சீசன்களை ஒப்பீடுகையில் இந்த சீசனில் சண்டை எல்லாமே கம்மிதான் என்று சொல்லலாம். எல்லோரும் தங்களை நல்லவர்களாக காட்டி கொள்வதற்கு ரொம்பவே பாடுபட்டார்கள்.
தீபக் மற்றும் மஞ்சரி எலிமினேஷன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தது. இதையெல்லாம் தாண்டி நிகழ்ச்சியின் சுவாரசியம் என்னவென்றால் புது தொகுப்பாளர் விஜய் சேதுபதி தான். இதற்கு முன்பாக கமலஹாசன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார். அப்போது கமலஹாசன் நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வந்தார்.
அதேபோல வழக்கம்போல விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியின் மூலம் நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் இரண்டையுமே பெற்றார். இந்த நிலையில் இந்த ஒரு சீசன் தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று பேசப்பட்ட நிலையில் இது குறித்து நேற்றைய பைனல் விழாவின் பொழுது சேனல் ஹிண்ட் ஒன்று கொடுத்துள்ளது.
அதாவது நிகழ்ச்சி முடியும் தருணத்தில் விஜய் சேதுபதியின் பயணம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டது. அதில் முடிவில் ஆட்டம் இதோட முடியல தொடரும்.. என்று கூறியிருந்தார். இதிலிருந்து அடுத்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…