பிக்பாஸ் அடுத்த சீசனை தொகுத்து வழங்கப்போவது இவர் தானா..? உறுதியான தகவல்..!

By Soundarya on தை 20, 2025

Spread the love

பிக் பாஸ் எட்டாவது சீசன் நடந்து நேற்றோடு முடிவடைந்துவிட்டது. டைட்டில் வின்னராக முத்து குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் ஒரு சில வாரங்களிலேயே முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்பது தெரிந்து விட்டது. மற்ற சீசன்களை ஒப்பீடுகையில் இந்த சீசனில் சண்டை எல்லாமே கம்மிதான் என்று சொல்லலாம். எல்லோரும் தங்களை நல்லவர்களாக காட்டி கொள்வதற்கு ரொம்பவே பாடுபட்டார்கள்.

   

தீபக் மற்றும் மஞ்சரி எலிமினேஷன் ரசிகர்களுக்கு  மிகப்பெரிய ஷாக் கொடுத்தது. இதையெல்லாம் தாண்டி நிகழ்ச்சியின் சுவாரசியம் என்னவென்றால் புது தொகுப்பாளர் விஜய் சேதுபதி தான். இதற்கு முன்பாக கமலஹாசன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார். அப்போது கமலஹாசன் நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வந்தார்.

   

 

அதேபோல வழக்கம்போல விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியின் மூலம் நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் இரண்டையுமே பெற்றார். இந்த நிலையில் இந்த ஒரு சீசன் தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று பேசப்பட்ட நிலையில் இது குறித்து நேற்றைய பைனல் விழாவின் பொழுது சேனல் ஹிண்ட் ஒன்று கொடுத்துள்ளது.

அதாவது நிகழ்ச்சி முடியும் தருணத்தில் விஜய் சேதுபதியின் பயணம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டது. அதில் முடிவில் ஆட்டம் இதோட முடியல தொடரும்.. என்று கூறியிருந்தார். இதிலிருந்து அடுத்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.