Categories: சினிமா

“பணம் நிறைய இருக்குன்னு திமிரு அதிகமாயிடுச்சா”.. தனது பட இயக்குனரை தனது பண்ணி திட்டிய விஜய்..

Spread the love

‘என்னடா பணம் நிறைய இருக்குன்னு திமிரு அதிகம் ஆச்சா படமே பண்ண மாட்ற அப்படின்னு என்னை செல்லமா “விஜய்” அண்ணா திட்டினாரு’, மனம் நெகிழ்ந்து வெளிப்படையாக பேசிய இயக்குனர் மோகன் ராஜா. “ஜெயம் ரவியை” வைத்து “ஜெயம்” படம் இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்ட இயக்குனர் தான் மோகன் ராஜா. இவர் “எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி”, உனக்கும் எனக்கும், தில்லாலங்கடி, வேலாயுதம், வேலைக்காரன் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பெரும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தற்போ தனியார் நிகழ்ச்சியில் விஜய் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

மோகன் ராஜா; நான் ஒவ்வொரு படம் பண்றதுக்கு ரொம்ப நாள் டைம் எடுத்துப்பேன், ஒரு படம் பண்றனா அடுத்த படத்துக்கு பெருசா யோசிக்க மாட்டேன், அது தன்னால் நடக்கும்னு கண்டுக்காம விட்டுட்டு படம் பண்ணாம சும்மா இருப்பேன். அந்த டைம்ல தான் விஜய் சார் லாக்டவுன்ல கால் பண்ணாரு, “என்னடா காசு ரொம்ப அதிகமா வச்சிருக்கான்னு திமிர்ல படம் எதுவும் பண்ணாம சும்மா சுத்திட்டு இருக்கியா ஒழுங்கா போய் படம் பண்ணுன்னு” சொல்லி என் மேல் அக்கரைல திட்டினாரு,

அதை நான் மறக்கவே மாட்டேன், என்னை எப்பவுமே கவனிச்சுட்டே தான் இருப்பார், என் மேல ரொம்ப அக்கறையான அண்ணா, என்ன பத்தி நல்லதா யோசிக்கிற ஒரு நல்ல மனுஷன்ல அவரும் ஒருத்தர். நான் மொத மொதல்ல ஜெயம் பண்ணும் போது அடுத்து “எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி” பண்ணுவன் நான் நினைச்சு கூட பாக்கல, ஜெயம் படம் முடிச்சதுக்கு அப்புறம் நான் சும்மாவே இருந்தேன்,

அதுக்கப்புறம் அதுக்கான டைம் வந்தது அதுக்கு அடுத்த படத்தை எழுதிய ஆரம்பிச்சு அந்த படமும் வெற்றி அடைந்தது, “வேலாயுதம்” படத்துல “விஜய்” சார் கூட நான் இணைந்து வேலை பார்த்ததுக்கு அப்புறம் என் கூட அவ்ளோ க்ளோசா ஆயிட்டாரு, எனக்கு ஒரு அண்ணனாவே மாறிட்டாரு, அவரு அந்த படத்துக்கு அப்புறம் நான் இன்னொரு படம் பண்ண ரொம்ப டைம் எடுத்தேன், அப்பதான் கால் பண்ணி என்ன திட்டினார்.

என்னடா பண்ற படம் வெளி வந்து ரொம்ப நாளாச்சு இன்னொரு படம் பண்ண மாட்டியான்னு சொல்லி என்கிட்ட கேட்டாரு, அதுக்கு அப்புறம் தான் நான் ரொம்ப ஆக்டிவா அடுத்த அடுத்த படம் பண்ண ஆரம்பிச்சேன், அப்படின்னு மோகன் ராஜாவும் விஜய் அவர்களுக்கும் இருக்கும் இணக்கமான ஒரு உறவை பற்றி வெளிப்படையாக மனம் நெகிழ்ந்து பேசினார்.

Ranjith Kumar

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago