நடிகர் பிரசாந்துக்காக விஜய் ஒரு விஷயத்தை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது கோட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கின்றார். இப்படத்தில் நடிகர் விஜயுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றது. நடிகர் விஜய் தற்போது தான் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவை முடித்துவிட்டு சற்று ரிலாக்ஸ் ஆகி வருகின்றார்.
அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவை சேர்ந்த தன்னுடைய பழைய நண்பி நண்பர்களை சந்தித்து வருகின்றார். நடிகை ரம்பாவை அவரது குடும்பத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து இயக்குனர் மகாராஜா பட இயக்குனரையும் சந்தித்து அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தார். இதற்கிடையில் அவர் தனது அடுத்த திரைப்படத்திற்கான கதையையும் கேட்டு வருவதாக கூறப்படுகின்றது.
கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் சேர்ந்து நடிகர் பிரஷாந்த் நடித்திருந்தார். இவரின் அந்தகன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் நேற்றுதான் அறிவித்திருந்தார்கள். இந்தப் படம் தங்கலான் திரைப்படத்துடன் மோத இருக்கின்றது.

இந்நிலையில் நடிகர் விஜய் பிரசாந்துக்காக ஒரு செயலை செய்ய இருக்கிறாராம். அதாவது இப்படத்தின் முதல் சிங்கள் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளதாம். இதை நடிகர் விஜய் தான் ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பிரசாந்துக்கும் இடையில் ஒரு ஆழமான நட்பு உருவாகி இருப்பதாகவும், அதற்காக இந்த உதவியை நடிகர் விஜய் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.
