க்ளோஸ் அப்பிள் செம க்யூட்டாக போஸ் கொடுக்கும் பிரியங்கா மோகன்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

By Mahalakshmi on ஜூலை 20, 2024

Spread the love

பிரியங்கா மோகன் மார்டன் உடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகப் பிரபலமாகிவிட்டார் பிரியங்கா மோகன். கல்லூரி படித்துக் கொண்டிருந்த போதே சினிமா மீது இருந்த ஆசை காரணமாக கன்னட மொழியில் நடித்து வந்தார்.

   

 

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்த இவர் தமிழ் சினிமாவிலும் நடிக்க தொடங்கி விட்டார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் இவர் நடிப்பு மிக பெரிய வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார்.

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

இந்த படங்கள் மூலமாக முன்னணி நடிகைகளின் லிஸ்டில் இணைந்த பிரியங்கா மோகன் தற்போது சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றார்.

அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.