விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் நடிகை கோமதிப்பிரியா மீனா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சீரியலில் அப்பாவி பெண்ணாக நடிக்கும் கோமதி பிரியா தனது மாமியார் என்ன சொன்னாலும் அதனை பொறுத்துக் கொள்வார்.
ஏன் மீனா இவ்வளவு பொறுமையாக இருக்கிறார் என ரசிகர்கள் திட்டுவதும் உண்டு. ஆனாலும் பரபரப்பான கதைக்களத்தோடு சீரியல் நகர்ந்து கொண்டே இருப்பதால் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதன் முதலில் வேலைக்காரன் சீரியலில் நடித்ததன் மூலம் கோமதி பிரியா பிரபலமானார்.
அந்த சீரியலில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் சுந்தரவள்ளி. அவரது நடிப்பு பலரின் பாராட்டுகளை பெற்றது. இன்ஜினியரிங் முடித்துவிட்டு பத்து மாதங்கள் சென்னையில் துறை சார்ந்த வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற சீரியலிலும் கோமதி பிரியா நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கோமதி பிரியா அவ்வ போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் மாடர்ன் டிரஸ்ஸில் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் மீனா நிஜத்தில் மார்டன் உடையில் கலக்குகிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

#image_title