வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி கோட் திரை படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தனது 69 ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். செப்டம்பர் மாதம் கடைசியில் தமிழக வெற்றி கழகத்தின் மாபெரும் மாநாடு திருச்சியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தனது அடுத்தடுத்த செயல்பாடுகள் மூலம் அரசியலில் தனது பயணத்தை விஜய் உறுதிப்படுத்துகிறார். கள்ளக்குறிச்சியில் 42 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகி விட்டனர். அது மட்டும் இல்லாமல் கள்ளச்சாராயம் குடித்து 150-க்கும் மேற்பட்டோர் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து கள்ளச்சாராயம் குடித்து உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram