90’s காலகட்டத்தில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் பொன்னம்பலம். இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் பொன்னம்பலத்தின் நடிப்பை யாராலும் மறக்க முடியாது. முதலில் அவர் சண்டை கலைஞராகத்தான் இருந்தார். ஆனால் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார்.
அதன் பிறகு வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், பெரிய மருது, நாட்டாமை, மாநகர காவல் என ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தார். சத்யராஜ் ஹீரோவாக நடித்த படம் புதிய வானம். புதிய வானம் படம் 1988 ஆம் ஆண்டு ரிலீசானது. இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரூபிணி, கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த நிலையில் நடிகர் சிவாஜி பற்றி பொன்னம்பலம் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது படத்தின் ஷூட்டிங் அடையாறில் வைத்து நடைபெற்றது நான் நடந்து போகும் போது ஒரு ரூபாய் காசு கீழே விழுந்து விட்டது. அந்த காசை சிவாஜி சார் கையில் எடுத்து இது என்ன என கேட்டார். இது 1 ரூபாய் காசு சார் என கூறினேன். அந்த காசை பார்த்தவுடன் அவர் கண் கலங்க ஆரம்பித்து விட்டார். எதுக்கு சார் கண் கலங்குறிங்க அப்படின்னு கேட்டேன். இந்த ஒரு ரூபா காசு நான் பார்த்ததே இல்ல அப்படின்னு சொன்னார். என்ன சார் சொல்றீங்க ஒரு ரூபாய் நீங்க பார்த்ததில்லையா அப்படின்னு கேட்டேன்.
கேட்டா சாப்பாடு வரும், பிரியாணி வரும் என்ன வேணும் என்றாலும் தருவாங்க. நான் காசு பார்த்ததில்லை அப்படின்னு சொன்னார். இதே மாதிரி நான் வச்சிருந்த 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்களையும் வாங்கி பார்த்தார். அதை பார்த்த உடனே ரொம்ப சந்தோஷப்பட்டார். இந்த காசை நான் வச்சுக்கட்டுமானு கேட்டார். என்ன சார் சொல்றீங்க காசு தானே நீங்களே வச்சுக்கோங்க அப்படின்னு சொன்னேன் என சிவாஜி பற்றிய சுவாரசியமான தகவலை பொன்னம்பலம் கூறியுள்ளார்.