தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் G.O.A.T. இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதே சமயம் இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் மிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி. ஆனால் மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கோட் திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி திரையிடப்பட்டுள்ளது. சற்றுமுன் தமிழகத்திலும் காலை 9 மணி காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. கோட் திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிய தீர்த்து வருகிறார்கள்.
கேரளாவில் கோட் திரைப்படம் பட்டையை கிளப்பியுள்ளதாக ரசிகர்களின் விமர்சனங்கள் தெரிவிக்கிறது. சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவருமே இன்று கொண்டாட்டத்தில் உள்ளனர். விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடித்துவிட்டு அரசியலில் களமிறங்க உள்ள நிலையில் கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் விஜயின் கோட் பேனருக்கு முன்பு புதுமண தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்டனர். தியேட்டர் வாசலில் நடந்த இந்த எமோஷனல் மொமென்ட் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.