தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சிவாஜி. சிவாஜி சாவித்திரி நடிப்பில் கருணாநிதி கதை வசனத்தில் ரிலீசான திரைப்படம் குறவஞ்சி. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க தேர்வானது சிவாஜி இல்லையாம்.
முதலில் எஸ்.எஸ் ராஜேந்திரன் தான் குறவஞ்சி படத்தின் கதாநாயகனாக நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். ஆனால் படத்தின் தொடக்க விழாவில் எஸ்எஸ் ராஜேந்திரனுக்கும் கலைஞருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த படத்தில் இருந்து எஸ் எஸ் ராஜேந்திரன் விலகிவிட்டார். அதன் பிறகு தான் சிவாஜியை அந்த படத்தில் நடிக்க வைக்க கேட்டுள்ளனர்.
அந்த சமயம் சிவாஜிக்கும் கருணாநிதிக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு இருந்துள்ளது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் கருணாநிதி கூறிய ஒரு வார்த்தைக்காக சிவாஜி குறவஞ்சி படத்தில் நடித்து கொடுத்துள்ளார். அந்த படம் 1960- ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. எப்போதுமே சிவாஜி கருணாநிதி கூட்டணியில் ரிலீஸ் ஆகும் படங்கள் சூப்பர் ஹிட் ஆகும்.
அந்த வரிசையில் குறவஞ்சி திரைப்படமும் இணைந்தது. எஸ் எஸ் ராஜேந்திரன் நடிக்க கமிட் ஆன கதாபாத்திரத்தில் நான் நடித்தால் அவர் தவறாக நினைக்க மாட்டாரா என சிவாஜி கேட்டுள்ளார். என்னோட நண்பர் அப்படிங்கிற முறையில இந்த படத்துல நீங்கள் நடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என கருணாநிதி கூறியதால் சிவாஜி குறவஞ்சி படத்தில் நடித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
‘po9875