வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். விஜய் தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கிவிட்டார். சினிமா ஒருபுறம் இருந்தாலும் மறுபடியும் தனது அரசியல் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விஜயின் 69-ஆவது படத்தை ஹச் வினோத் இயக்குகிறார். சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியாகும் 68-வது படம் தான் கோட். 69-ஆவது படத்திற்கு பிறகு விஜய் சினிமாவில் பார்க்க முடியாது என அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.
இதனால் எப்போதும் போல விஜயின் கோட் படத்தை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். அனைத்து திரையரங்குகளும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு கோட் திரைப்படம் முன்பதிவிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில் நடிகர் கூல் சுரேஷ் படத்தை பார்ப்பதற்கு தியேட்டருக்கு ஆட்டுக்குட்டியுடன் வந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
#Goat உடன் வந்த #CoolSuresh pic.twitter.com/0UoxpWv7lC
— thooki_adichuruve_paathuko (@singlecva) September 5, 2024