99 வருஷம் லீசுக்கு எடுத்த தளபதி.. ஓ.. அந்த CM பார்த்ததுக்கு இதான் காரணமா.? தரமான ஸ்கெட்ச் போட்ட விஜய்.!

By Ranjith Kumar

Published on:

தளபதி விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். படம் நீண்ட எதிர்பார்ப்பு இருப்பதால் மிக விறுவிறுப்பாக இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாத கடைசிக்குள் இப்ப படப்பிடிப்பு முழுமையாக முடிந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தில் வில்லன் போல் தோற்றமளிக்கும் அப்பா ஒரு கதாபாத்திரமாகவும் ஹீரோ போல் இருக்கும் மகனாக ஒரு கதாபாத்திரமாகவும் டபுள் ஆப்ஷனில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

   

தற்போது இப்படமும் அடுத்து தளபதி 69 படமும் விஜய் அவர்கள் நடித்து முடித்து முழு நேர அரசியல்வாதியாக ஆகப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாண்டிச்சேரி முதலமைச்சரான என் ரங்கசாமி அவர்களை சில நாட்களுக்கு முன்னால் விஜய் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார். ஏதேனும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும் என்று நினைத்திருந்தால், தற்போது பாண்டிச்சேரியில் மாபெரும் படப்பிடிப்பு தளம் மற்றும் திரையரங்கு காம்ப்ளக்ஸ் கட்ட உள்ளதாக விஜய் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளாராம்.

அதற்காக பாண்டிச்சேரியில் உள்ள கடலோரப் பகுதியில் மிகப்பிரமாண்ட இடம் ஒன்று இருக்கிறதாம், அதை விஜய் அவர்களுக்கு 99 வருஷம் ஒப்பந்தம் எழுதப்பட்டு குத்தகைக்கு தரப்பட்டுள்ளதாம், அதில் மிகப் பெரிய காம்ப்ளக்ஸ் மற்றும் சினிமா படப்பிடிப்பிற்கான இடத்தை கட்ட உள்ளாராம். கிட்டத்தட்ட பாண்டிச்சேரியில் பல தமிழ் படங்கள் தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் சமயத்தில், அங்கு இதுபோல் மிகப்பெரிய காம்ப்ளக்ஸ் கட்டி வைத்தால் பிற்காலத்தில் சினிமா துறவினருக்கு மிக உதவியாக இருக்கும் என்று விஜய் அவர்கள் இந்த மாபெரும் விஷயத்தை செய்துள்ளார் என்று தகவல் தெரியவந்துள்ளது.

author avatar
Ranjith Kumar