மீண்டும் விஜய்க்கு ஜோடியான த்ரிஷா ; குஷியில் ரசிகர்கள், என்ன படம் தெரியுமா ?

By Deepika

Published on:

 

 

   

ஆரம்பத்தில் சிம்ரன் விஜய்க்கு சரியான ஜோடியாக கருதப்பட்டு வந்தார். துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே என அடுத்தடுத்து ஹிட் படங்களை இந்த ஜோடி வழங்கினார். கில்லி படம் மூலம் முதன் முதலாக விஜய்யும் த்ரிஷாவும் இணைந்து நடித்தனர்.

 

trisha and vijay in ghilli

 

இவர்களின் ஜோடி மக்கள் மத்தியில் ஹிட்டாக தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி என அடுத்தடுத்து இணைத்து நடித்தனர். அதன்பின் பல வருடங்கள் கழித்து லியோ படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்தது. விஜய் த்ரிஷா ரசிகர்கள் சந்தோசத்தில் துள்ளி குதித்தனர்.

 

Actress Trisha

 

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் திரிஷா 3.0 வாக மாறிய நிலையில், விஜய்யுடன் லியோ படத்தில் நடித்த திரிஷாவுக்கு அடுத்து அஜித்தின் விடாமுயற்சி, டொவினோ தாமஸின் ஐடென்டிட்டி, சிரஞ்சீவியின் பிரம்மாண்ட படம் என பல படங்கள் வரிசையாக கிடைத்துள்ளன. இந்நிலையில், மீண்டும் விஜய்யுடன் திரிஷா இணைந்து நடித்து வருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

 

Trisha in Goat

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் அப்பா விஜய்க்கு சினேகாவும் மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் ஜோடி என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக திரிஷா கோட் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக செம அப்டேட் விஜய் ரசிகர்களுக்கு கிடைத்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

 

Vijay and triha in ghilli

 

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த கேப்பில் தென்னிந்தியா முழுவதும் பல படங்களில் நடித்து வரும் திரிஷா அப்படியே விஜய்யின் கோட் படத்திலும் சமீபத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அநேகமாக விஜய்யை வைத்து வெங்கட் பிரபு சமீபத்தில் எடுத்த பாடல் காட்சியில் “அப்படி போடு” ரேஞ்சுக்கு ஒரு பாடலுக்கு திரிஷா விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருப்பார் எனக் கூறுகின்றனர்.

author avatar
Deepika