விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோக்க்களில் ஒன்று குக் வித் கோமாளி. கொரோனா லாக்டவுன் சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவை பெற்று மூன்று சீசன்களை கடந்தது. தற்பொழுது 4வது சீசன் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இறுதி கட்டத்தையும் எட்டியுள்ளது.
இந்த சீசனில் மூன்று சீசன்களிலும் கோமாளியாக கலக்கிய சிவாங்கி குக்காக களமிறங்கி கலக்கி வருகிறார். ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு காமெடியாக கொடுக்க முடியும் என்பதை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த சீசனும் நிரூபித்துள்ளது. தற்பொழுது ரசிகர்களின் பேராதரவை பெற்று குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ஆனது இறுதி நிகழ்ச்சியில் மாபெரும் டூரிஸ்ட் நடந்துள்ளது.
இதில் முதல் சிவாங்கி தான் டைட்டிலை வின் செய்வார் என்று நினைத்து வந்த நிலையில், தற்போது மயின் கோபி அவர்கள் அதை தட்டி பறித்தார். தற்பொழுது இந்த நான்கு சீசன்களிலும் நடுவராக இருந்து வருபவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட்ட அவர்கள் நடுவர் பதவியிலிருந்து விலகி விட்டார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்தார்கள். இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்த நிலையில், இவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பார்ப்பதற்கு பெரிதும் ஆர்வம் இருக்காது என்று பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்களின் இடத்தை நிரப்புவதற்காக செஃப் மற்றும் நடிகருமான “மதம்பட்டி ரங்கராஜ்” அவர்கள் வந்துள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு மெஹேந்தி சர்க்கஸ் படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து இவர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பென்குயின் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் CWC நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்டிருக்கு பதிலாக இவர் செஃப் இடத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.