விஜய் 2 அவதாரம் எடுத்தா, நா 3 அவதாரம் எடுப்பேன்.. அதிரடியாக வெளியான AK63 படத்தின் டைட்டில்..

By Ranjith Kumar on மார்ச் 14, 2024

Spread the love

கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக எடுக்கப்பட்டு வரும் படம் தான் “விடா முயற்சி”. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி அவர்கள் இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு மேலாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது, கடந்த வருடம் அஜித்தின் பிறந்த நாளான மார்ச் 1ஆம் தேதி அன்று படத்தின் டைட்டிலையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு இருந்தார்கள். அதன்பின் நீண்ட காலமாக படம் இயக்காமல் கிடப்பிலே போட்டு வைக்கப்பட்டது.

இரண்டு மாதம் கழித்து மீண்டும் துவங்கி டிசம்பர் மாத சமயத்தில் படத்தை மறுபடியும் ஓரம் கட்டி வைத்தார்கள். அந்த சமயத்தில் அஜித் அவர்கள் தன் பைக்கை எடுத்துக்கொண்டு உலக பயணத்திற்கு ட்ரிப் சென்று விட்டார். அதன் பின் மீண்டும் ஜனவரி மாதத்திற்கு பிறகு படம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது சில பல பணப் பிரச்சனையால் லைக்கா நிறுவனத்தால் இப்படத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கிடையில் அஜித் அவர்களுக்கு உடல் நலக் குறைவால் Appolo மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

   

அவருக்கு நரம்பு சிதைவு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பி நலமாக இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே இவர் எங்கே விட முயற்சி படம் நடிக்கப் போகிறார் என்றும், விடாமுயற்சி படத்தை வலிமை படம் போல் பல வருடம் கிடப்பில் போட்டு விடுவார்கள் என்றும் பலரும் பல விதமாக சர்ச்சை கிளப்பி வந்தார்கள். அந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அஜித்தின் அடுத்த படமான ஆதிக் ரவிச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படத்தின் அபிசியல் டைட்டிலை வெளியிட்டு இருக்கிறார்கள்.

   

மை 3 மூவி மேக்கர்ஸ் இயக்கத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படத்தின் பெயர் தான் “Good bad ugly”. தற்போது இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் இப்படத்தின் அறிவிப்பை வெளியிடகிறோம் என்று தெரிவித்திருந்தார்கள். தற்போது இன்று மாலை இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டிருந்த நிலையில், அஜித்தின் ரசிகர்கள் மிக ஆச்சரியத்திற்கு உள்ளாகி தற்போது இதை வைரலாக்கி வருகிறார்கள்.