#image_title
தளபதி விஜய் நடிப்பில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக தளபதி தனது 69-ஆவது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்தார். முழு நேரமாக அவர் அரசியலில் ஈடுபட போகிறார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கிவிட்டார்.
#image_title
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று தான் அந்த மாநாட்டு பணிகளும் விமர்சையாக தொடங்கியது. இந்த நிலையில் தளபதியின் 69 ஆவது திரைப்படத்தை பிரபல கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்சிக் திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது.
தளபதி விஜயின் 69 ஆவது படத்தை ஹச் வினோத் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். பிரபல வில்லன் நடிகரான பாபி தியோல் தளபதியின் 69 ஆவது படத்தில் நடிக்கிறார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரபல நடிகரான நரேன் ஆகியோரும் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளனர். இதில் பூஜா கிட்ட ஏற்கனவே பீஸ்ட் படத்தில் தளபதியுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் தளபதி 69 படத்தின் பூஜை நல்லபடியாக முடிந்து ஷூட்டிங் தொடங்கியது. முதலில் பாடல் காட்சிகளை படமாக்க உள்ளனர். அது முடிந்ததும் மாநாடு பணிகளை முடித்துவிட்டு அடுத்த மாதம் விஜய் படபிடிப்பில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக இந்த படத்திற்கு விஜய் ஒரு மாதத்தில் 20 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அடுத்த 10 நாட்கள் அரசியல் தொடர்பான பணிகளை கவனிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் களம் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்…
தமிழ்நாட்டை போதையற்ற மாநிலமாக மாற்றுவோம் என்ற உறுதியான முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு…
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…
தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…
தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…