Connect with us

CINEMA

கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை என படத்திலிருந்து பாதியிலயே விலகிய விஜய்.. அதே படத்தில் நடித்து புகழ் பெற்ற சூர்யா.. அந்த படம் இதுதானா..?

நடிகர் விஜய் ஆரம்ப கட்டத்தில் நல்ல நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்தார். அதில் சில படங்கள் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்து, அவரை அடுத்தடுத்த உயரத்துக்கு கொண்டு சென்றன. ஆனால் இயக்குநர் விக்ரமன் இயக்கிய படத்தில், 2 பாடல் காட்சிகளில் நடித்துவிட்டு, படத்தின் கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை என்று விலகிக்கொண்டார். ஆனால் அதே படத்தில் நடித்ததால் நடிகர் சூர்யா பெரிய அளவில் வெற்றி பெற்றார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குநர் விக்ரமன் கூறியதாவது, விஜய் இப்போது பெரிய கமர்ஷியல் ஹீரோ ஆகி விட்டார். கில்லி படத்துக்கு பிறகு அவர் கமர்ஷியல் ஹீரோவாக உச்சத்துக்கு போய்விட்டார்.

   

நான் இயக்கிய உன்னை நினைத்து படத்தில் முதலில் நடித்தது விஜய்தான். இரண்டு பாடல் காட்சிகளில் நடித்த நிலையில், என்னிடம் வந்து தனியாக பேசினார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை. இது சரியாக வரவில்லை என்று கூறினார். விஜய் உணர்வை புரிந்துக்கொண்ட நான், உங்களுக்கு பிடிக்கவில்லை என்று படத்தின் கிளைமேக்ஸை மாற்றினால், அப்புறம் ஒவ்வொரு விஷயத்துக்கும் விஜய்க்கு பிடிக்குமா, பிடிக்காதா என யோசித்து, யோசித்து பயந்து பயந்து செய்ய வேண்டி இருக்கும். படம் முழுக்க ஒரு இறுக்கத்தோடு, தாழ்வு மனப்பான்மையோடு நான் பணியாற்ற வேண்டும். அது என் கேரக்டருக்கு ஒத்துவராது.

நான் சுதந்திரமாக படம் எடுக்க விரும்புபவன். இதற்கு முன் விஜயகாந்த் நடித்த படம் எடுத்தேன். கடைசி வரை அவர் எதுவும் சொல்லவில்லை. அதனால் நமக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இந்த படத்தை இத்துடன் நிறுத்தி விடலாம். இதே படத்தை வேறு ஹீரோவை வைத்து எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் வேறு தயாரிப்பாளர், இயக்குநர் படத்தில் நடியுங்கள். இதில் எந்த தவறும் இல்லை. நாம் நண்பர்களாகவே இருப்போம் என்று சொன்னேன்.

இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். அதற்கு பிறகு உன்னை நினைத்து படத்தில் விஜய் நடிக்க இருந்த கேரக்டரில் சூர்யா நடித்தார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. நான் கமர்ஷியல் டைரக்டர் கிடையாது. என் படங்கள் எப்படி இருக்கும் என ரசிகர்களுக்கு தெரியும். அதனால் கமர்ஷியல் ஹீரோவான விஜயை வைத்து மீண்டும் படம் எடுக்க நான் முயற்சிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் இயக்குநர் விக்ரமன்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top