தமிழக அரசியலில் நிகழக்கூடிய ஒவ்வொரு நிகழ்வும் தற்போது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாறி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் கரூரில் நடந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையிலும் நடிகரும் தமிழக வெற்றிக்கனாக தலைவருமான விஜய் வெளியிட்ட வீடியோ உணர்ச்சி பூர்வமில்லாமல் சினிமா பாணியில் இருந்ததாக பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் என பலரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஒரு நபர் விஜய் வெளியிட்ட வீடியோவை பார்த்து கிண்டலாக சிரித்ததோடு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக, நீங்கள் முதல்வரிடம் சினிமா வசனம் மாதிரியான சவால் விடுகிறீர்கள், அதற்கெல்லாம் கைதட்டும் உங்கள் தொண்டர்களுக்கு அறிவே கிடையாதா என்று அந்த நபர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவன் நடிக்கிறான் டா, அரசியல் செய்யறது அல்ல டா என்ற பேச்சும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உங்கள் வாழ்க்கையை ஒரு நடிகனின் பின்னால் சென்று தொலைத்து விட வேண்டாம், அவர் செய்வது தவறு, நேர்மையற்றது என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பக்கத்து மாநிலத்தவர் உண்மையை சொல்கிறார் என பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி 'தமிழக வெற்றி கழகம்' (தவெக)…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்காக ஆசையோடு ஏற்பாடுகளைச் செய்து வந்த தந்தை, திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த…