50 வருடத்திற்கு மேலாக அதிமுகவில் பயணித்த செங்கோட்டையன் அரசியலில் ஆழ அகலத்தை நன்கு அறிந்தவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் விரக்தியில் இருந்த செங்கோட்டையன் தவெகவில் நேற்று இணைந்தார். செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை விஜய் கொடுத்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களமே மாறியுள்ளது மட்டுமின்றி பரபரப்பாகவும் இருக்கிறது.
இந்நிலையில் செங்கோட்டையனிடம் TVK குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு 2026 தேர்தலில் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வது உறுதி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மேலும் சிலர் தவெகவில் இணைய உள்ளதாக பரவும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விரைவில் அதற்கான விடை கிடைக்கும் என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்
