பிரேசில் உலகில் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அந்நாட்டில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புட்டான்டன் டிவி எனப்படும் இந்த தடுப்பூ 12 முதல் 59 வயது உடையவர்களுக்கு செலுத்தப்பட ஏற்றது. தற்போது கிடைக்கக்கூடிய இந்த தடுப்பூசிக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள் தேவைப்பட்ட நிலையில் இந்த புதிய தடுப்பூசி ஒரு டோஸ் போதுமானது .
பிரேசில் 16 ஆயிரம் தன்னார்வலர்களிடம் எட்டு வருடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கடுமையான டெங்குக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது. உலக அளவில் டெங்குவால் 14.6 மில்லியன் பாதிப்புகளும், 12 ஆயிரம் இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
