வெள்ளை மாளிகையில் துப்பாக்கிசூடு… அடிமடியில் கைவைத்த டிரம்ப்… 19 நாடுகளுக்கு வந்த புதிய சிக்கல்..!!!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே வாலிபர் ஒருவர் திடீர் என்று துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூடு வெள்ளை மாளிகையின் வடமேற்கே உள்ள மெட்ரோ நிலையம் அருகே நடந்தது. இதில் வெர்ஜீனியாவை சேர்ந்த தேசிய காவல் படையின் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்தார்கள்.  இந்த  துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து, ஆப்கானியர்களின் குடியேற்றத்துக்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பர்மா, ஈரான், ஹைட்டி சோமாலியா, சூடான், யேமன், கியூபா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து வந்தவர்களுடைய கிரீன் கார்டுகளை முழுமையாக பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த வீரர்களில் ஒருவர் உயிரிழந்ததாக டிரம்ப் அறிவித்துள்ளார்.