RRR பட தயாரிப்பு நிறுவனத்துடன் கை கோரக்க போகிறாரா விஜய்..? அப்போ Thalapathy69 அவரோடு தானா..? லீக்கான அப்டேட்..

By Sumathi

Updated on:

நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.. கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், விடிவி கணேஷ், பிரேம்ஜி, அஜ்மல், வைபவ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கப் போகும் 69 படம் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

   

ஏனெனில் வழக்கமாக விஜய் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டாலே, அடுத்த படத்துக்கான ஏற்பாடுகளில் விஜய் கவனம் செலுத்துவார். டைரக்டர், கதை, தயாரிப்பாளர், அவருடன் நடிக்கும் நடிகர், நடிகையர் என பல விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும். அப்படித்தான் லியோ படம் ஷூட்டிங் நடந்த போதே, விஜய் 68 படத்தின் தகவல்கள் பரவத் துவங்கியது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பதும், அதிலும் இரட்டை வேடம் என்பதும் முன்பே தெரிய வந்துவிட்டது.

ஆனால் இப்போது கோட் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில், அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் வெளியானது. இந்த படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம்தான், விஜயின் அடுத்த புதிய படத்தை தயாரிக்க உள்ளது.

இதற்காக அந்த தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து விஜயிடம் பேசியதாகவும், தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவிடம் விஜய் ஓகே சொல்லி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. டிடிவி எண்டர்டெயின்ட்மென்ட் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம், அந்த நிறுவனம் மிக பிரமாண்ட படங்களையே இயக்கி வருகிறது. அதனால் விஜய் படமும் பெரிய பிரமாண்ட படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Sumathi