பொங்கல் பண்டிகையை ஒட்டி எல் எல் விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது நடிகர் அருண் விஜய் தனக்கு ஏற்பட்ட விபத்தை எமோஷனலாக பதிவு செய்திருக்கிறார்.
அந்த பதிவில் மிஷின் படத்திற்கு நீங்கள் கொடுத்த மாபெரும் வெற்றி நன்றி கூறியும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சிகளில் நடிக்கும் போது எனக்கு ஏற்பட்ட எலும்பு முறிவுகள் மற்றும் தசைநாள் கிழித்தலால் கடந்த இரண்டு மாதங்களாக நான் அனுபவித்த வலியை மறக்கச் செய்தது உங்கள் அன்பு என்னை மீண்டும் அதிக வலிமையாக மாற்றி ஆக்ஷனில் விரைவில் களமிறங்கும் என்று பதிவிட்டு இருக்கிறார்.
தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டிற்கு திரை பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்த நிலையில் நானும் மதுரையில் தன்னுடைய மிஷன் திரைப்படத்திற்கு மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக வந்திருந்தேன்.
அப்போது ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்ததாக கூறியிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அலங்காநல்லூரில் நேரடியாக பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்னுடைய மிஷின் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதைக் காண வந்ததன் வாயிலாக தான் நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேறதாகவும் கூறியிருந்தார்.
மேலும், எனக்கு நீண்ட நாளாகவே ஜல்லிக்கட்டு சம்பந்தமான திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது அதில் வரும் ஆக்க்ஷன் காட்சிகளில் டூப் போடக்கூடாது என்று நினைப்பேன்; அப்படித்தான் மிஷின் படத்திலும் நான் நடித்து இருந்தேன். தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படபிடிப்பின் போது கீழே விழுந்து கையில் அடிபட்டுவிட்டது இதனால் இரண்டு மாதமாக நான் பெட் ரெஸ்டில் தான் இருந்து இருக்கிறேன் இன்னும் பத்து நாட்களில் சரியாகி விடும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று நடிகர் அருண்விஜய் தெரிவித்துள்ளார்.