CINEMA
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்.. கொடியில் என்னலாம் இருக்குன்னு நோட் பண்ணிங்களா..?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழு நேரமாக ஈடுபட போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார். வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அடுத்த மாத இறுதியில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தனது கட்சி கொடியை அறிமுகம் செய்ய உள்ளதாக நேற்றே விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டார்.இந்த நிலையில் தளபதி விஜய் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலைய செயலகத்தில் ஏற்றினார்.
அந்த கொடி மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. நடுவே ஒரு பூ அமைந்துள்ளது. பூவின் இருபுறமும் யானைகள் இருப்பது போல கட்சிக்கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.