அஜித்தோட அந்த பாட்டு கேட்டு விஜய் இம்ப்ரஸ் ஆயிட்டார்… அதே மாதிரி ஒரு பாட்டு வேணும்னு சொன்னாரு- பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

By vinoth on ஆனி 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி தற்போது விஜய் அரசியலுக்குள் நுழைகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள இவர் இன்னும் ஒரே ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு பின்னர் அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.

   

தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது முழுக்க முழுக்க அவர் நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் என்றால் அது திருமலைதான். அந்த படத்தை அறிமுக இயக்குனர் ரமணா இயக்கி இருந்தார்.

   

அதுவரை மீசை க்ளீன் ஷேவ் கெட்டப்பில் இருந்த விஜய் அந்த படத்தில்தான் முதல்முறையாக தன் கெட்டப்பை மாற்றினார். திருமலை படம் ஒரு ஆக்‌ஷன் படம் என்றாலும் அதிலும் ஆழமான காதல் காட்சிகள் விஜய்க்கும் ஜோதிகாவுக்கும் இடையில் இருக்கும்.

 

அந்தகாதலின் வலியை வெளிப்படுத்தும் விதமாக “நீயா பேசியது” பாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும். இந்த பாடல் உருவான கதையை இயக்குனர் ரமணா ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “விஜய் சாருக்கு அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்ற ‘என்ன சொல்ல போகிறாய்?’ பாடல் ரொம்ப பிடிக்கும்.

அந்த பாடல் போலவே நம் படத்தில் ஒரு பாடல் வேண்டும் என அவர் கேட்டார். அதற்காகதான் நீயா பேசியது பாடலை உருவாக்கினோம்” எனக் கூறியுள்ளார். இரண்டு பாடல்களுமே இன்றளவும் கேட்டு ரசிக்கும்படி கிளாசிக் பாடல்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.