எம்ஜிஆருக்கு வாத்தியார் என்ற பட்டப்பெயரை வைத்தது யார் தெரியுமா?… அட இந்த நடிகர்தானா?

By vinoth on ஆனி 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுமுடியாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

அவரது ரசிகர்கள் பெரும்பாலும் உழைக்கும் வர்க்க அடித்தட்டு மக்கள்தான். அதனால் அவரகளைக் கவர்வது போல அவர்களில் ஒருவராகவே எம் ஜி ஆர் வருவார். வந்து இருக்கும் தடைகளை உடைத்து முன்னேறுவார். இதனால் அந்த மக்கள் அவரை ஒரு நடிகராகவோ அல்லது நபராகவோ பார்க்காமல் தெய்வத்தைப் பார்ப்பது போல பார்த்தனர்.

   

அதற்கேற்றார் போல அவர்கள் கொண்டாடும் பட்டங்களாக ஒவ்வொரு காலகட்டத்துக்கும் எம் ஜி ஆருக்கு கொடுத்தனர். ஒரு கால கட்டத்தில் பொன்மனச் செம்மல் மற்றும் மக்கள் திலகம் என அழைக்கப்பட்டு வந்த எம் ஜி ஆர் பின்னர் வாத்தியார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இந்த வாத்தியார் என்ற பட்டம் மிகவும் கலோக்கியலாக இருந்ததால் அதுவே அவரது ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டது. எம் ஜி ஆர் படம் என்பது போய் வாத்தியார் படம் என்றானது.

   

#image_title

 

இந்த வாத்தியார் பட்டத்தை முதல் முதலில் எம் ஜி ஆருக்குக் கொடுத்தது, அவருடன் பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகர் சோதானாம். அவர் அப்படி அழைக்க அந்த பெயர் நிலைத்துவிட்டது. அதன்  பின்னர் அவர் படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆரம்பித்த தேங்காய் சீனிவாசன் அதை மெட்ராஸ் மொழியில் வாத்யாரே என்று மாற்றினார். அந்த வார்த்தை இன்னும் அதிகமான நெருக்கத்தை ரசிகர்களுக்குக் கொடுக்க அந்த பெயரே இப்போது வரை நிலைத்துவிட்டது.