தமிழ் சினிமாவில் ஒரு தனி பல்கலைக்கழகமாக விளங்கியவர் கமல்ஹாசன், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, பாடல் மற்றும் நடனம் என தொடாத துறைகளே இல்லை என சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார். அப்படிதான் கமர்ஷியல் படங்களாக இயக்கி வந்த சுந்தர் சி தன்ன்னுடைய அன்பே சிவம் படத்தை இயக்க வைத்தார். அந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் இன்றளவும் ஒரு நல்ல படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு விபத்துக்குப் பின்னர் முகம் கோரமாகி கண்பார்வை போய் விடும் நபராக நடித்திருப்பார். அதற்காக அவர் சோடாபுட்டி கண்ணாடி ஒன்றை பயன்படுத்தியுள்ளனர். அதுவும் உண்மையான கண்ணாடிதான் வேண்டும் என சொன்னாராம் கமல்ஹாசன். அப்படி ஒரு உண்மையான கண்ணாடியை எடுத்து வந்துள்ளார்கள். ஆனால் அதன் தடிமன் அதிகம் என்பதால் அதைப் போட்டதும் கமலுக்கு பார்வை மங்கி தெளிவாக தெரியவில்லையாம்.
இதை எப்படி சரி செய்வது என பலரும் யோசித்த நிலையில் கமல்ஹாசன் கண்ணாடியின் பவருக்கு ஏற்றபடி அதற்கு எதிரான மதிப்பில் காண்டாக்ட் லென்ஸ் வாங்கி கண்களில் பொருத்திக் கொண்டாராம். அதனால் கண்ணாடி குவித்திறனை காண்டாக்ட் லென்ஸ் சரி செய்துவிட்டதாம். இப்படியெல்லாம் யோசிக்க ஒரு ஜீனியஸால்தான் முடியும்.
