Connect with us

600 கோடி பட்ஜெட், 4 வருட உழைப்பு.. கலக்கியதா நடிகர் பிரபாஸின் கல்கி 2829 AD.. ட்விட்டர் விமர்சனம் இதோ..!

CINEMA

600 கோடி பட்ஜெட், 4 வருட உழைப்பு.. கலக்கியதா நடிகர் பிரபாஸின் கல்கி 2829 AD.. ட்விட்டர் விமர்சனம் இதோ..!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் கல்கி 2898 ad திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருந்த நிலையில் இதன் ட்விட்டர் விமர்சனம் தற்போது வைரலாகி வருகின்றது.

தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநதி என்ற திரைப்படத்தை இயக்கிய நாக்  அஸ்வின் கடந்த ஐந்து ஆண்டு காலமாக செதுக்கி எடுத்த திரைப்படம் தான் கல்கி. இன்று இந்த திரைப்படம் காலை 4 மணி அளவில் உலகம் முழுவதும் வெளியானது. பாகுபலி என்ற மிகப்பெரிய திரைப்படத்தில் நடித்த பிரபலமான பிரபாஸ் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

   

இதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. காலை முதலே தெலுங்கு ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். மிகப்பெரிய கட்டவுட்களை வைத்து பிரம்மாண்ட மாலை அணிவித்து மியூசிக் எல்லாம் போட்டு ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி தீர்த்து வருகின்றனர். முதலில் சிறப்பு காட்சியை பார்த்த ரசிகர்கள் முதல் பாதி மிக ஸ்லோவாக இருப்பதாக கூறியிருந்தார்கள்.

 

மேலும் நடிகர் பிரபாஸ் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்திருக்கிறார். இரண்டாம் பாதியில் படம் விஸ்வரூபம் எடுத்து நல்ல வரவேற்பு கொடுத்திருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.  பிரபாஸுக்கு பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் கமலஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பு மிக சிறப்பாக இருக்கின்றது எனவும், சண்டை காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் லெவலில் இருப்பதாக கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சில சர்ப்ரைஸ் கேமியோ ரோல்களில் நடித்த நடிகர்கள் ரசிகர்களுக்கு நிச்சயம் ட்ரீட் கொடுக்கும் வகையில் இருந்ததாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை தொடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top