பிரபல நடிகரான முரளி பெங்களூரைச் சேர்ந்தவர். சுமார் 60-க்கும் மேற்பட்ட படங்களில் முரளி கதாநாயகனாக நடித்துள்ளார். முதல் முதலில் பூவிலங்கு என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் 1984-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதன் பிறகு முரளி நடித்த புது வசந்தம், இதயம் கடல் பூக்கள் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
அதிலும் கடல் பூக்கள் திரைப்படத்தில் நடித்ததற்காக முரளிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. முரளி முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பிரபுதேவா, கார்த்திக், பார்த்திபன், சரத்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகைகளான மீனா, ரோஜா, சிம்ரன், தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் முரளி பேசிய பழைய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. அதில் அதில் பேசியதாவது, சினிமாவில் நான் வரதுக்கு எனக்கு பிள்ளையார் சுழி போட்டது எங்க அப்பா தான். சினிமாவில் நான் நடிகனா வரல. முதலில நான் அசிஸ்டன்ட் டைரக்டரா தான் வந்தேன். ஒரு 8,9 படம் நான் அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை பார்த்தேன். வேலை பார்த்துட்டு இருக்கும் போது ஒரு சில ஆர்ட்டிஸ்ட்க்கு நான் டயலாக் சொல்லிக் கொடுப்பேன். மெயின் ஹீரோ, ஹீரோயினுக்கு நான் சொல்ல மாட்டேன். நான் மூன்றாவது அச்சிச்டண்டா வேலை பார்த்ததால சின்ன சின்ன கேரக்டர் ஆர்டிஸ்ட்க்கு தான் டயலாக் சொல்லி கொடுப்பேன்.
அப்போ எங்க அப்பா என்ன பார்த்திருக்கிறார். இவன் நல்லா சொல்லித்தரான் ஏன் நடிக்க வைக்க கூடாது அப்படின்னு அப்பா யோசிச்சி இருக்காரு. ஒரு 8,9 படம் முடிச்சதுக்கு அப்புறம் எங்க அப்பா என்கிட்ட வந்து நல்ல டயலாக் சொல்லிக் கொடுக்கிற நீ ஏன் நடிக்க கூடாது அப்படின்னு கேட்டாரு. தமிழ்ல நான் நடிச்ச முதல் படம் பூவிலங்கு. அதுதான் கன்னடத்தில் எடுத்தாங்க. அதுக்கப்புறம் ட்ரை பண்ணி தான் ஒரு நடிகனா மாறினேன் என கூறியுள்ளார்.