தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தீவிர அரசியல் நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 298 வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், வாக்காளர்களைக் கையாளுதல் மற்றும் களப்பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து அவர் விரிவான அறிவுரைகளை வழங்கியதாகத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அடிமட்ட அளவிலான நிர்வாகிகளை நேரடியாகச் சந்தித்து விஜய் ஊக்கப்படுத்தியிருப்பது, மற்ற அரசியல் கட்சிகளிடையே உற்றுநோக்கத்தக்க ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
