வெளியான “தமிழக வெற்றி கழகத்தின்” அடுத்த அறிக்கை.. மக்களுக்காக தளபதி என்ன சொல்லிருக்காருனு பாருங்க..

By Ranjith Kumar

Updated on:

விஜய் அவர்கள் பிப்ரவரி 2ஆம் தேதி அன்று நான் தமிழ் சினிமாவை விட்டு விலகி முழு நேரமாக நான் அரசியலில் இறங்க போகிறேன் என்று ஒரு மூன்று பக்கத்திற்கு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார், அந்த அறிக்கையில் அவர் கூறியவாரு, இருக்கும் இரண்டு படங்களை நான் முடித்துவிட்டு முழு நேரமாக அரசியலில் இறங்கி, எனக்கு இதுவரை ஆதரவு தெரிவித்த இந்த தமிழ் மக்களுக்கும், அன்பு செலுத்திய இந்த நல் உள்ளங்களும், என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பார்ந்த நண்பர்களுக்காகவும், தமிழகத்தில் நடக்கும் ஊழலையும் தப்பையும் தட்டிக் கேட்பதற்காக, முந்தைய அரசியல்வாதிகள் கற்றுக் கொடுத்த அரசியல் பயணத்தை வைத்து நான் முழு நேரமாக அரசியலில் இறங்க உள்ளேன், இவை அனைத்தும் நான் செய்யும் தமிழ் மக்களுக்கு நன்றி கடன் என்று தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார்.

ezgif 3 adf5c6e1ca

இவர் கட்சி பெயர் அறிவித்தவுடன் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து அவர்கள் அரசியலுக்கு வருவதைக் கண்டு ஆதரவும் அன்பும் அள்ளி தெளித்தார்கள், மக்கள் அனைவரும் இவர் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்று பல வருடங்களாக காத்துக் கொண்டிருந்தார்கள். அவர் அரசியலுக்கு வந்ததை கண்டு பேரன்பும், பெரும் ஆதரவும் அனைத்தும் விஜய் அவருக்கு பெருமிதம் கொள்ளும் அளவுக்கு மக்கள் அள்ளித் தந்து விட்டார்கள்.

   

விஜயை கண்டிராத அளவுக்கு மக்களின் அன்பு ஆதரவும் பெருகி இருந்ததை கண்டு, விஜய் அவர்கள் மனம் நெகிழ்ந்து, நீங்கள் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் என்று கூறி விஜய் அவர்கள் மீண்டும் ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

102 784x441

விஜய் மனம் நெகிழ்ந்து இட்ட அறிக்கையை கண்ட ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் அதை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar