Connect with us

CINEMA

14 முறை நேரடியாக மோதிய விஜய் – அஜித் திரைப்படங்கள்.. ஜெயித்தது யார் தெரியுமா..?

எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல் வரிசையில் இன்று தமிழ் சினிமாவில் நேரடி போட்டியாளர்களாக இருப்பவர்கள் நடிகர் அஜீத்குமார், நடிகர் விஜய் இருவரும்தான். சமகால நடிகர்களாக இருவரும் கடந்த 1990களில்தான் சினிமாவுக்குள் வந்தனர். துவக்கத்தில் தங்களுக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும், அதை தக்க வைத்துக்கொள்ளவும் இருவருமே கடுமையாக போராடினர் என்றால் அது மிகையல்ல. அப்பா எஸ்ஏ சந்திரசேகர் பெரிய டைரக்டர் என்ற அடையாளத்துடன் வந்தாலும், நல்ல வெற்றிப்படங்களை தனது திறமையாக நடிப்பால் கொடுத்து முன்னேறியவர் விஜய். ஆனால் சினிமா பின்புலமே இல்லாமல் வந்தும், தன் ஆற்றலால் இன்று முன்னணியில் இருப்பவர் அஜீத்குமார். இருவருமே உழைப்பால் உயர்ந்தவர்கள்தான்.

   

கடந்த 1996 முதல், 2023 வரை, 28 ஆண்டுகளில் தீபாவளி, பொங்கல் போன்ற காலகட்டங்களில் அஜீத்குமார், விஜய் நடித்த படங்கள் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் சில படங்கள் சில தினங்கள் முன்பாக, பின்பாக ரிலீஸ் ஆகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் போட்டி படங்களாக இருந்தன. இந்த 28 ஆண்டுகளில் வந்த விஜய் படங்களும் சரி, அஜீத்குமார் படங்களும் சரி, அவர்களது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக, திருப்புமுனை படங்களாக இருந்திருக்கின்றன. 1996ம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளிவந்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை, அஜீத் நடித்த வான்மதி இரண்டுமே வெற்றிப்படங்கள்தான். அதுபோல் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரண்ட்ஸ், திருமலை, போக்கிரி, ஜில்லா என விஜய்க்கு 8 படங்களும் மிகப்பெரிய ஹிட் படங்களாக இருந்தன.

அதே போல் அஜீத்குமாருக்கு உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உன்னைத்தேடி, தீனா, வில்லன், வீரம், துணிவு ஆகிய ஆறு படங்களும் சிறந்த வெற்றிப்படங்களாக அமைந்தன. கல்லூரி வாசல், ரெட்டை ஜடை வயசு, உன்னைக்கொடு என்னைத் தருவேன், ஆஞ்சநேயா, பரமசிவன், ஆழ்வார் போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. அதே போல் விஜய்க்கு காலமெல்லாம் காத்திருப்பேன், ஆதி ஆகிய படங்கள் தோல்வி படங்களாக இருந்தன. மொத்தத்தில் அதிக படங்களில், அதிக நாட்கள் திரையில் ஓடி வெற்றி பெற்றது விஜய் படங்கள்தான். அஜீத்துக்கு சில படங்கள் மட்டுமே நல்ல வெற்றியை, நல்ல வசூலை கொடுத்தது. அதனால் இந்த போட்டியில் அதிக படங்களில் வென்றவர் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top