தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிவடைந்ததால் தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து இரண்டு பாடல்களும் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் இது தொடர்பாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்தார்.
அடுத்ததாக எச் வினோத் இயக்கும் தனது 69-ஆவது படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அதோடு சினிமாவில் இருந்து விலகி அரசியல் ஈடுபடப் போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கி விட்டார். இந்த நிலையில் வெங்கட் பிரபு தி கோட் திரைப்படத்தின் முதல் பாதியை நடிகர் விஜய்க்கு போட்டு காண்பித்துள்ளார்.
அதனை பார்த்த விஜய் படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என வெங்கட் பிரபு மற்றும் உதவி இயக்குனர்களை பாராட்டி உள்ளார். மேலும் முதல் பாதியை போல இரண்டாவது பாதியும் சிறப்பாக இருக்க வேண்டும் என விஜய் வெங்கட் பிரபுவுக்கு வார்னிங் கொடுத்ததாக மூத்த சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். படம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் விஜய், வெங்கட் பிரபு உள்பட படக்குழுவினர் மிகவும் கவனமாக உள்ளனர்.