நடிகர் அஜித் தற்போது மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஹைதராபாத்தில் தற்போது செட்டு போட்டு படம் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதை அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்திலும் கமிட்டாகி நடிகர் அஜித் நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்தின் முதல் ஷெடுல் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்த பிறகு தொடங்கும் என்று கூறப்படுகின்றது.
இந்த திரைப்படங்களை முடித்துவிட்டு நடிகர் அஜித் ஒரு வருடம் ஓய்வு எடுக்க இருக்கின்றார் அதாவது அவருக்கு மீண்டும் ஒரு ஆபரேஷன் நடக்க இருக்கின்றதாம். அதை முடித்துவிட்டு ஒரு வருஷம் நடிப்பை விட்டு விட்டு முழுவதும் ஓய்வெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஏற்கனவே நடிகர் விஜய் தனது அடுத்த திரைப்படத்தில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்த உள்ள நிலையில் அஜித்தும் இப்படி கூறியது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இருப்பினும் நடிகர் அஜித் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார் எனவும், அவரின் உடல் நிலையை தேற்றுவதற்காக தான் இந்த ஒரு வருட இடைவெளி என்று கூறப்படுகிறது.
