நடிகை சங்கீதா கடந்த 1997-ஆம் ஆண்டு ரிலீசான கங்கோத்ரி என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழில் கடந்த 1998-ஆம் ஆண்டு ரிலீசான காதலே நிம்மதி என்ற படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி சங்கீதா பிசியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் உயிர், தனம், நேபாளி உள்ளிட்ட வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் சங்கீதா நடித்துள்ளார். பிதாமகன் திரைப்படம் சங்கீதாவை பெரிய லெவலுக்கு கொண்டு சென்றது. அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. சங்கீதாவின் நடிப்பிற்கு தமிழக அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. பிரபல பாடகரான கிரிஷை கடந்த 2009-ஆம் ஆண்டு சங்கீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் சங்கீதா குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் சங்கீதா நடுவராக இருக்கிறார். முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் சங்கீதா நடுவராக இருந்தார். பின்னர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

#image_title
இது மட்டுமில்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக வேலை பார்த்துள்ளார். சங்கீதாவும் கிரிஷும் நட்சத்திர தம்பதிகளாக வளம் வருகின்றனர். இந்த நிலையில் க்ரிஷ் தனது மகளுடன் கவுண்டமணி காமெடி ரீ- கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பாப்பா அருமையாக நடிக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram
