வயநாடு நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நடிகர் சியான் விக்ரம் உதவி செய்து இருக்கின்றார்.
கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கின்றது. இதனால் பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. அதிலும் நேற்று அதிகாலை 2 மணியளவில் முண்டகை பகுதியிலிருந்து பாலம் ஆற்றோடு ஆற்றாக அடித்துச் செல்லப்பட்டது. அதையடுத்து வயநாட்டில் இரண்டு முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 500 வீடுகளை சேர்ந்த 400 குடும்பங்கள் உள்ளிட்ட 1500 பேர் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து இரண்டு நாட்களாக மீட்பு பணி தீவிரமடைந்து வருகின்றது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டி இருக்கின்றது. மேலும் 225 பேரின் நிலை என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. இதனால் தொடர்ந்து மீட்பு பணி தீவிர படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கின்றது என பல மாநில தலைவர்கள் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகிறார்கள். தமிழக அரசு சார்பாக 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து வயநாடுக்கு உதவி செய்யும் விதமாக கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் உதவி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

#image_title
கேரள நிலச்சரிவு மீட்பு நிவாரண பணிகளுக்கு நிதி உதவி வழங்கும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியம் குறைந்த தொகையாக இருந்தாலும் அது மிக உதவியாக இருக்கும். கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கான வங்கி கணக்கு 67319948232 என்ற எண்ணில் நீங்கள் நிதி உதவி வழங்கலாம் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து பலரும் தங்களது உதவிகளை செய்து வரும் நிலையில் நடிகர் சியான் விக்ரம் தற்போது முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்திருக்கின்றார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது/