சாமானிய மக்களும் அரசை கேள்வி கேட்கவும், அரசின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளவும் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சியில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஊழலற்ற, லஞ்சமற்ற வெளிப்படையான நிர்வாகம் வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் விஜய் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, ஆர்டிஐ மனுக்களுக்கு உரிய முறையில் பதில் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது. குறிப்பாக, அதிகாரிகள் மாற்றம், புதிய அறிவிப்புகள், திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு புதிய பணியிட நியமனங்கள் தொடர்பாக எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் தொடர்பான கேள்விகளுக்கு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த தகவல் அலுவலர்கள் மௌனம் காப்பது இந்த விவகாரத்தை மேலும் விவாதப் பொருளாக்கியுள்ளது. சமீபத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மேற்கொண்ட சுற்றுப்பயணங்களின் போது செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உதாரணமாக, சேலம் பயணத்திற்கு கோடிக்கணக்கில் செலவானதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை ஆளும் தரப்பு மறுத்த போதிலும், அதுகுறித்த உண்மையான விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல், அண்மையில் முதல்வர் விஜய் மேற்கொண்ட லண்டன் பயணம் அரசுப் பணத்திலா அல்லது சொந்தச் செலவிலா என்ற கேள்விக்கு இதுவரை முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் தான், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் பயணம் தொடர்பான வரவு-செலவு விவரங்களைக் கேட்டுப் பலரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால், முதல்வர் விஜய் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தர முடியாது எனக் கூறி அந்த ஆர்டிஐ மனுக்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மனித வள மேலாண்மை துறையும் அரசு ஊழியர்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்து வருவதாகத் தெரிகிறது. முதல்வர் குறித்த எந்தவொரு விவரத்தையும் வெளியிடக் கூடாது என தலைமைச் செயலக வட்டாரத்தில் உள்ள முக்கிய நபர் ஒருவரே கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…
தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…
பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே…
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அமைத்ததற்கான ரூ. 200 கட்டணப் பாக்கி தொடர்பாக எழுந்த வாக்குவாதம்…
மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள கலம்போலி பகுதியில், வழக்கமான வாகனத் தணிக்கையின் போது அதிவேகமாக வந்த சுவிஃப்ட் டிசையர் கார்…