நீங்க ஆண்டது பத்தாதா?…. ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்த விஜய்…!

By Nanthini on புரட்டாதி 20, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த வாரம் திருச்சியில் தொடங்கினார். திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த கையோடு அரியலூர் சென்று இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் நாகை வந்துள்ளார். பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு நடுவே விஜய் நாகையில் சற்று முன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அதில், மீனவ நண்பனாக இருக்கும் இந்த விஜயின் அன்பு வணக்கங்கள் என்று நாகைபுத்தூர் ரவுண்டானாவில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். திமுக ஆண்டது பத்தாதா என கேள்வி எழுப்பிய விஜய், நான் களத்திற்கு வருவது புதிது அல்ல என்றும் பேசினார். தமிழக மீனவர்களை தடுப்பது எப்போது நிற்கும்? தாய் பாசம் கொடுத்த தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களின் கனவுகளும் வாழ்க்கையும் ரொம்ப முக்கியம் என்று கூறியுள்ளார்.